www.buddhikapathirana.com    

ஸ்கைப் ஊடாக புத்திகவை தொடர்பு கொள்க

My status

புத்திக பத்திரண - பாராளுமன்ற உரைகள்

 

 
 

உங்களின் ஒத்துழைப்பினைக் வெளிக்காட்டுங்கள்

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய தேசியக் கட்சியின்

உத்தியோகபூர்வ வெப்தளம்

 
 
 

சமாதி சனசமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஈடேற்றப்படுகின்ற சமூக நலனோம்பல் மற்றும் சமூக அபிவிருத்திச் சேவைகள் ::..

 
 

சமாதி சனசமூக அபிவிருத்தி மன்றம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற / இலாபநோக்கு இல்லாத தொண்டர் சமூக உபகார அமைப்பொன்றாகும். இது கீழே காட்டப்பட்ட சமூக நலனோம்புகை  மற்றும் சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றது.

இலவசமாக நடாத்தப்படுகின்ற கணினி / ஆங்கிலம் / தமிழ் மொழிப் படநெறிகள் (2001) முதல் இதுவரை வெற்றிகரமாக பாடநெறிகளைப் பூர்த்தி செய்தோர் எண்ணிக்கை 10,000 பேர்களை விஞ்சியுள்ளது
தொழிலை எதிர்பார்த்துள்ளோரது ஆற்றல் விருத்தியின் பொருட்டு செயலமர்வுகளை விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துதல்
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை நிலைபேறு டையதாக பேணிவரும் பொருட்டு முனைப்பான பயனுறுதிமிக்க மற்றும் இடையறாத கருத்திட்டங்களை அமுலாக்குதல்.
ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்களுடன் கூட்டாக வீடமைப்புக் கருத்திட்டங்களில் பங்கேற்றல்
மரபுரீதியான சிங்கள கலைநுணுக்கங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘சமாதி கவி மடுவ’ உடனடிக் கவிதை புனைதல் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
கிராமிய இளைஞர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் மேம்படுத்தும் பொருட்டு ‘வசந்த பிரதிபா’ பயிற்சித்தொடர்களை நடாத்துதல்
ஆண்டு ஐந்து புலமைப்பரிசில், சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளில் தோற்றுகின்ற மாணவ மாணவியர்களுக்காக கல்விக் கருத்தரங்குகளை நடாத்துதல்
பொலில் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்களின் உளப்பாங்குகளையும் திறமைகளையும் வளர்த்தெடுக்கும் பொருட்டு சுற்றாடல் சிக்கல்கள் மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகள் பற்றிய கருத்திட்டங்களையும்,  நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்துதல்
தொழில் தருநர்கள் மற்றும் தொழில் எதிர்பார்த்து உள்ளவர்களின் தரவு முறைமை (Database) யொன்றைப் பேணிவருதல். இதனூடாக 8000 ற்கு மேற்பட்டோருக்கு தனியார் துறையில் தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
40 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை செலவிட்டு மாலிம்பட பிரதேசத்தில் தொழில்பயிற்சி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டதோடு அங்கு கணினிப் பயிற்சி, ஸ்கிறீன் பிரின்டிங், தையல், வீடியோ திரைப்படத் தயாரிப்பு மற்றும் எடிட்டிங் / அசையா படப்பிடிப்பு போன்ற பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன. அத்துடன் கருத்தரங்கு களையும் செயலமர்வுகளையும் நடாத்துவதற்கான அதிநவீன நிறைவான கேட்போர் கூடமொன்றும் அங்கு உள்ளது.
மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 373 பாடசாலைகளில் நூலகங்களுக்காக 18.3 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பட்டுள்ளன.
 
 

தனியார்துறையினரின் உதவியுடன் மாத்தறை மாவட்டத்தில் சுனாமி மறுசீரமைப்புப் பணிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டமை.

மாத்தறை மாவட்டத்தைச் சேர்த்த 6500 ற்கு மேற்பட்ட தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர்களுக்கு ரூ. 200,000 வீதம் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கப் பட்டன.

அரசாங்கப் பாடசாலைகள், அனைத்து அறநெறிப்பாடசாலைகள், முன்பள்ளிகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக்கழகங்கள், அரசாங்கப் பாடசாலைகளுக்கான சான்றிதழ்கள் / பதிவேடுகளை இலவசமாக அச்சிடும் கருத்திட்டங்கள்

பல்வேறு வைபவங்களின் பொது ஒலிபெருக்கிக் கருவிகளை இலவசமாக வழங்குதலும் எமது உபகரணங்களைப் பாவித்து வீடியோ பதிவு செய்தலும்

குறிப்பு : மேலதிக விபரங்களுக்காக  சமாதி சனசமூக அபிபிருத்தி மன்றத்தின் www.samadhifoundation.org வெப் தளத்தில் பிரவேசிக்கவும்.

 
   
   

முதற் பக்கம்  |  தோற்றப்பாடு  |  புகைப்பட கலரி  |  மக்கள் சேவை  |  செய்திகள்  |  தொடர்பு கொள்க

பதிப்புரிமை 2010 - புத்திக்க பத்திரண. முழுப்பதிப்புரிமை உடையது

Solution By : Jaya Shri Combine