www.buddhikapathirana.com    

ஸ்கைப் ஊடாக புத்திகவை தொடர்பு கொள்க

My status

புத்திக பத்திரண - பாராளுமன்ற உரைகள்

 

 
 

உங்களின் ஒத்துழைப்பினைக் வெளிக்காட்டுங்கள்

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய தேசியக் கட்சியின்

உத்தியோகபூர்வ வெப்தளம்

 
 
 

நோக்கு ::..

 
  எமது சமுதாயத்தை அறிவினாலும், ஆரோக்கியத்தினாலும் மனிதப் பண்பு களாலும் கட்டிவளர்த்து நிறைவான தன்மையை அடையச் செய்வித்தல்.  
     
 

பணி ::..

 
  சமூகம் மீதுள்ள தனது பொறுப்பு மற்றும் கடமை பற்றி ஒவ்வொரு மனிதனுக்கும் விழிப்பூட்டுதல்,  
     
 

அரசியல் பயணப்பாதை (சம்பவங்களின் முக்கியத்துவத்திற்கு இணங்க வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.) ::..

 
 

பாராளுமன்ற உறுப்பினர்

 

போட்டியிட்ட முதலாவது பொதுத்தேர்தலான 2010 ஏப்றில் 08இல் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்து மாத்தறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். 62,449 விருப்பு வாக்குகளைப் பெற்று மாத்தறை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றார். பெற்ற அதிகூடிய வாக்குகளின் சாதனையைப் படைத்ததோடு மேற்படி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 7வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 60 உறுப்பினர்களில் அகில இலங்கையிலும் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளின் சதவீதத்தைப் பெற்றார்.

பாராளுமன்ற ஆலோசனைக்குழு அங்கத்தவர்

 

14 முன்னணி ஆலோசனைக் குழுக்களின் அங்கத்தவராக அமைவதோடு அவை மத்தியில் பொருளாதார அபிவிருத்தி, துறைமுகங்கள் - விமான சேவைகள், கடற்றொழில் நீரகவளங்கள், தேசிய பாதுகாப்பு போன்ற மிக முக்கியத்துவம் வகிக்கும் அமைச்சுக்கள் அடங்குகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் - தென் மாகாணசபை

 

2009 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டி யிட்டு தென் மாகாண சபைக்குத் தெரிவானார். 37,802 வாக்குகளைப் பெற்று மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் ஆனார். தென் மாகாணத்தில் பிரதான கட்சிகளின்  வேட்பாளரொருவர் சாதித்த அதிகூடிய வாக்குகளின் சதவீதத் திற்கும் உரிமை பாராட்டினார். இலங்கையின் மாகாண சபையொன்றுக்கு நியமிக்கப்பட்ட  வயதில் மிகவும் குறைந்த எதிர்க்கட்சித் தலைவர் எனும் சாதனையைப் படைத்தமையும் சிறப்பம்சமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் அதிஉயர் அதிகார பீடமான அதன் நிறைவேற்றுச் சபையின் அங்கத்தவராக  2009 நவம்பரில் இருந்து 2011  ஏப்றல் வரை பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகவும் முனைப்பான இளம் அரசியல்வாதியாக, கீர்த்திமிக்க ‘TOYP’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த மாணவர் அமைப்பான ஐக்கிய சமவாதி மாணவர் முன்னணியின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான பிரதான அமைப்பாளராக 1991 இல் நியமனம் பெற்றதோடு  1995 ஆம் ஆண்டுவரை அப்பதவியை வகித்தார்.

1992 இல் இருந்து 1995 வரையும் 2004 இல் இருந்து இற்றை வரையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவராவார்.

TNL தொலைக்காட்சியில் செய்தி இணைப்பாளராக நியமனம் பெற்றமையால்  1995 ஆகஸ்ட் 22 ஆம் திகதி முதல் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து  முழுமையாக விலகவேண்டி நேரிட்டது.

அதன் பின்னர் மீண்டும் ஊடகத்துறையில் இருந்து விலகி 2004 யூலை 10 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தாம் போட்டியிட்ட முதலாவது தேர்தலிலேயே 44,165 விருப்பு வாக்குகளைப் பெற்று தென்மாகாண சபைக்குத் தெரிவானார். அத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளினதும் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் முழுத்தீவிலும் அதிகூடிய விருப்புவாக்கு சதவீதத்தைப் பெற்றார்.

2004 இல் இருந்து 2009 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண ஊடகச் செயலாளராகப் பணியாற்றினார்.

 
 

2005 இல் இருந்து இற்றைவரை அக்குரெஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான ஐ. தே. க. பிரதான அமைப்பாளராகவும் தொகுதி அமைப்புத் தலைவராகவும் செயலாற்றுகிறார்.

2004 ஆம் ஆண்டில் மாகாணசபை உறுப்பினராகக் தெரிவாகி ஒரு வருட காலப் பகுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழே காட்டப்பட்டுள்ள குழுக்களில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார்.

 
 

 

திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழு

இளைஞர் உபகுழு

ஊடகக் குழு

பல்கலைக்கழக உபகுழு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய சுகாதாரசேவை ஊழியர் சங்கத்தின் மாத்தறை மாவட்டத் தவிசாளர்

றுஹூணு பல்கலைக்கழகத்தின் கல்விசார் / கல்விசாரா பதவியணி மற்றும் மாணவர் இணைப்பாளராக கட்சியைப் பிரதிநிதித்தவம் செய்கிறார்.

2004 இல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 50வது தேசிய சம்மேளனத்தில் உரையாற்றிய மாத்தறை மாவட்டத்தின் முதலாவதும் ஒரேயொரு இளைஞர் தலைவரு மாவார்.

2005  சனாதிபதி தேர்தலில் ஐ. தே. க. வேட்பாளர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தேர்தல் இயக்கத்தில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் ரூபவாஹினி உரையாடல்களில் பங்கேற்கவும் தெரிவு செய்யப்பட்ட 20 பேச்சாளர்கள் மற்றும் விவாதத்தில்  ஈடுபடும் 12 பேர்களில் ஒருவராகவும் விளங்க வாய்ப்பு கிடைத்தது.

2010 சனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் தேர்தல் இயக்கத்தில் உரையாற்றத் தெரிவுசெய்த ஒரு பேச்சாளராகவும் தொலைக்காட்சி உரையாடலில் பங்குபற்றத் தெரிவு செய்யப்பட்ட ஒரு விவாதமேடை அங்கத்தவராகவும் செயலாற்றினார்.

2006 மாகாண சபைத்தேர்தலில் மாலிம்பட பிரதேசசபையை வெற்றிப்பாதையில் வழிநடத்தி முழுமையான தென் மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்ற  ஒரெயொரு பிரதேச சபையாக அதனை மாற்றியமை.

அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் கட்சித் காவலாக அமைந்த 2007 ஆம் ஆண்டில் 20 ஐ.தே.க. உறுப்பினர்கள் அமைச்சர்களாக ஆளுங்கட்சி யோடு இணைந்த சந்தர்ப்பத்திலும் 2010 ஆம் ஆண்டில் 18வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சார்பாக  வாக்களித்து  ஐ. தே.க. உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துடைப்பு வழங்கிய பின்னணியில் கூட தனது கட்சியின் கொள்கைகளைப் பாதுகாத்து நிலைதளராமல் கட்சியோடு இணைந்திருந்தமையும் தனது இரத்தத்தால் உறுதியளித்து கட்சியைப் பாதுகாத்து செயலாற்றியமையும்.

 
     
 

சர்வதேச வெற்றிகள் ::..

 
 

2007 நவம்பர் ஆம் திகதி இந்தோனேசியாவின் ஐகர்த்தா நகரில் இடம்பெற்ற ஆசிய இளம் லிபரல் சனநாயகவாதிகளின் (YLDA) வருடாந்த மகா சம்மேளனத்தில் அதன் நிறைவேற்று சபைக்குத் தெரிவாகியமை.

2008 ஆம் ஆண்டில் முழு ஆசியப் பிராந்தியத்திலுமே அதிகூடிய வாக்குகளைப் பெற்று அச்சங்கத்தின் அதியுயர் நிறைவேற்றுக்குழுவுக்கு தெரிவாகியமை. அத்தருணத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டார். இதற்கான தேர்தல் 2008 நவம்பர் 04 ஆம் திகதி காம்போடியவின் சியெம்ரீப் நகரில் இடம்பெற்றது.

 
     
 

வெளிநாட்டு விஜயங்கள் ::..

 
 

லிபரல் கொள்கைகள், சுதந்திர வர்த்தகப் பொருளாதாரமும் நவீன பொருளியலும் சனநாயகம் பற்றிய செயலமர்வுக்கு ஜேர்மனியின்  பெட்றிக் நியுமான் மன்றத்தின் (FNSt) தலைமைத்துவத்திற்கான சர்வதேச அக்கடமியிலிருந்து 2000 ஆம் ஆண்டில் புலமைப் பரிசில் உரித்தானமை.

தெற்காசிய இளம் லிபரல்வாதிகளின் சங்கத்தின் (LYSA) விசேட நிறைவேற் றுச்சபை மாநாட்டில்  2006 மே மாதம் 6 முதல் 10 வரை புதுடில்லியில் கலந்து கொண்டமை

2006 மே மாதம் 21 முதல் 27 வரை பிலிப்பைன்ஸ்  தேசத்தில் நடைபெற்ற ‘உள்ளூராட்சி நிர்வாகமும் முகாமைத்துவமும்’ கல்விச் சுற்றுலா.

2006 மே மாதம் 08 முதல் 31 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘மலேசியாவின் உள்ளூராட்சி நிர்வாகமும் முகாமைத்துவமும்’ பற்றிய கல்விச் சுற்றுலா.

2006 ஒக்டோபர் 13 முதல் 16 வரை இலங்கையில் களுத்துறையில் நடைபெற்ற ‘’தெற்காசிய லிபரல்வாதம், இளமை மற்றும் சனநாயகம்’’ பற்றிய தெற்காசிய இடம் லிபரல்வாதிகளின் சங்கத்தின் சர்வதேச செயலமர்வு

பிரெட்ரிக் நியுமான் (FNSt) மன்றத்தினால் 2006 ஆகஸ்ட் 28 முதல் 2006 செப்ரெம்பர் 08 வரை ‘உபாயமுறைத் திட்டமிடலும் உபாயமுறைச் சிந்தனையும்’ பற்றி ஜேர்மனியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சி

2006 ஒக்ரோபர் 28 இல் இருந்து நவம்பர் 11 வரை ஐக்கிய அமெரிக்க அரசாங்கத் திணைக்களத்தினால் நெறிப்படுத்தப்பட்ட சர்வதேச தலைமைத் துவ பயிற்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய இலங்கையின் ஒரேயொரு பிரதிநிதி யாவார்.  ‘ஐக்கிய அமெரிக்க சட்டவாக்கத்துறைத் தேர்தல்’ என்பதே அதன் தொனிப்பொருளாக அமைந்தது. அதன்பின்னர் வாஷிங்டன் டீ, சீ. பென்சில்வேனியா, நியுயோர்க், மின்சோட்டா மற்றும் அரிசோனா ஆகிய நகரங்களிலும் மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிய இளம் லிபரல்வாதிகளின் சங்கம் (YLDA)  ஏற்பாடு செய்து 2007 ஜனவரி 17 முதல் 20 வரை கொழும்பில் நடைபெற்ற “நிதியங்களை சேகரிக்கும் கலை’’ எனும் பணம் திரட்டல் எனும் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டமை.

2007 செம்ரெம்பர் 08 முதல் 10 வரை இந்துருவையில் நடைபெற்ற ‘லிபரல் வாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், புரிந்துணர்வு மற்றும் நெருங்குதல்’ பற்றிய தெற்காசிய இளம் லிபரல் வாதிகளின் சங்கத்தின் (LYSA) சர்வதேச செயலமர்வில் கலந்து கொண்டமை.

ஆசிய இளம் லிபரல்வாதிகளின் சங்கத்தினால் (YLDA) 2007 நவம்பர் 22 முதல் 27 வரை இந்தோசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற ‘வகைபொறுப்புக்கூற வேண்டியதும் பயனுறுதியுடையதுமான அரச நிர்வா கத்திற்காக பிரசைகளை பங்கேற்கச் செய்தல்’ பற்றிய செயலமர்வில் கலந்து கொண்டமை

‘வியட்நாமிய குடியரசின் கிராமிய கைத்தொழில்கள்’ பற்றிக் கற்றறியும்  2008 பெப்ரவரி 23 முதல் மார்ச் 01 வரை வியட்நாமில் கல்விச்சுற்றுலாவை மேற்கொண்ட மாகாணசபை உறுப்பினர் அணியின் அங்கத்தவராவார்.

நகரத்திட்டமிடல்’ பற்றிய கற்கைக்காக 2008 மார்ச் 02 முதல் 04 வரை சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்ட மாகாணச்சபை உறுப்பினர் அணியின் அங்கத்தவராவார்.

ஆசிய இளம் லிபரல் சனநாயகவாதிகளின சங்கத்தினால் 2008 மே 28  முதல் யூன் 01 வரை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடத்தப்பட்ட ‘பிரயோகத் தொடர்பாடல் மற்றும் கருத்திட்டங்களை எவ்வாறு வெற்றிகரமானதாக ஆக்கிக்கொள்வது பிரயோக ரீதியான ஓர் அறிமுகம்’ பற்றிய பயிற்சியில் பங்கேற்றமை.

ஆசிய இளம் லிபரல் சனநாயகவாதிகளின் சங்கத்தினால் (YLDA) 2008 ஒக்டோபர் 29 இல் இருந்து கம்போடியாவின் சிரியம் ரீப் நகரில் நடத்தப் பட்ட ‘’சமாதானமும் மனித உரிமைகளும்’’ பற்றிய பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றமை.

மலேசிய மக்கள் கட்சியின்  இளைஞர் சங்கம்,  பிரட்றிக் நியுமான் மன்றத் துடன் (FNSt) கூட்டாக  2009 ஏப்றில் 29 முதல் மே 03 வரை மலேசியாவின் கோலாம்பூரில் நடத்திய ‘’உபாய முறைத் திட்டமிடல்’’ பற்றிய  செயலமர்வில் பங்கேற்றமை

பிரட்றிக் நியுமான் மன்றத்தின் (FNSt) ஒத்துழைப்புடன் ஆசிய இளம் லிபரல் சனநாயகவாதிகளின் சங்கமும் (YLDA) தெற்காசிய இளம் லிபரல்வாதிகளின் சங்கமும்(LYSA)  கூட்டாக 2009 நவம்பர் 04 முதல் 09 வரை நேபாளத்தின் கட்மண்டு நகரில் நடத்திய ‘‘உலகமயமாக்கல்’’ பற்றிய செயலமர்வில் கலந்து கொண்டமை

   

தேசிய செயற்பாடுகள் / பயிற்சி செயலமர்வுகள் ::..

லிபரல் இளைஞர் கூட்டமைப்பின் தேசியத் தவிசாளர் (2006 – 2008)

பிரெட்றிக் நியுமான் (FNSt) மன்றத்தின் கீழ் தென் மாகாணத்தின் லிபரல் இளைஞர் கழகங்களுக்கு  பொறுப்பாக செயலாற்றினார். (2005 – 2010)

பிரெட்றிக் ஈபட் (FES) மன்றத்தினாலும் இலங்கை மன்றக் கல்லூரியினாலும் (SLFI) நெறிப்படுத்தப்பட்ட சனநாயக இளம் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட் டத்தின்  பயிற்றுவிப்பாளராக (2005 – 2006) செயலாற்றியமை.

பிரட்றிக் ஈபட் (FES) மன்றமும் இலங்கை மன்றக் கல்லூரியும் (SLFI) கூட்டாக நெறிப்படுத்திய சனநாயக இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின் பயிற்றுவிப்பாளருக்குப்  பயிற்சியளிக்கும் மற்றும் சமுதாயக் கல்வி செயலமர்வுகளிலும் பங்கேற்றமை. (2005 -2006)

‘Save Lanka Kids and community Concern’   நிறுவனத்தினால் 2008 ஒக்டோபர் 19-21 வரை கொழும்பில் நடத்தப்பட்ட HIV ‘REACH 2008’ பயிற்சி நிகழ்ச்சியில் முனைப்பான பங்களிப்பினை வழங்கினார்.

 
     
 

ஊடக அனுபவம் ::..

 
 

உதவிச் செய்தி இணைப்பாளராக ரெல்ஷான் நெற்வர்க் நிறுவனத்துடன் (TNL) தொடர்பு கொண்டதோடு பின்னர் செய்தி இணைப்பாளர் மற்றும் பிரதிச் செய்தி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார். (1995 ஆகஸ்ற் முதல் 1997 ஏப்றில் வரை)

ரி. என். எல் தொலைக்காட்சியின் ‘ஜனஹன்ட’ மற்றும் நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்துதலும் தொகுத்து வழங்குதலும் (1996 செப்ரெம்பர் முதல் 1998 ஏப்றில் வரை)

சிரச ரூபவாஹினியின் நிறைவேற்று நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச் சித்திட்ட நெறியாள்கையாளராகவும் செயலாற்றியமை (1998 யூன் 2004 ஏப்றில்)

எம். ரீ. வீ. செனல் தனியார் கம்பெனிக்குச் சொந்தமான சிரச தொலைக் காட்சியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த அரசியல் மற்றும் நடப்பு விவாதங்கள் நிகழ்ச்சியான ‘‘சமீப தசுன’’ நிகழ்ச்சியின் நெறியாள்கை, தொகுத்து வழங்குதல்  மற்றும்  தயாரிப்பு  (1998 யூன் –  2004 ஏப்றில் )

சிரச  தொலைக்காட்சி ஊடாக வாரந்தோறும் ஒளிபரப்பாகிய அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றிய நிகழ்ச்சியான ‘விசம்முதிய’ ‘ஜனதா பிரஸ்ன’ மற்றும் ‘செபே விசதும்’ நிகழ்ச்சிகளின் நெறியாள்கை தொகுத்து வழங்குதல் மற்றும் தயாரிப்பு (1999 ஒக்டோபர் - 2004 வரை)

உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்  உறுப்பினர் (1996 இல் இருந்து 2004 வரை)

பிரட்றிக் நியுமான் (FNSt) மன்றத்தின் அனுசரணையில் இயங்கிவரும் சனநாயகம் மற்றும் தலைமைத்துவத்திற்கான நிறுவனத்தின் (IDL) ஊடக இணைப்பாளர் (2005 - 2010)

 

பல்கலைக்கழக வாழ்க்கை ::..

களனிப் பல்கலைக்கழக மருத்துவபீட உள்ளுறைக்கு முந்திய மருத்துவப் பயிற்சியாளர் ஆவார். (1993- 2003)

இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பல்கலைக்கழக மாணவரெனும் வகையில் ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி பேராதனைப் பல்கலைக்கழக இலக்கிய சங்கமும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஏற்பாட செய்த ‘மாகே தேசிய அவதி கரனுமென’ கலைவிழாவில் ‘சரசவி பிரக்ஞாகுரயெக்’ விருதினைப் பெற்றார். (1998)

 

 

பாடசாலை வாழ்க்கை ::..

மாத்தறை றாஹுல வித்தியாலயத்தின் பழைய மாணவர் (1980 – 1993)

றாஹுல வித்தியாலய  சிரேஷ்ட விவாதக்குழு தலைவர் (1991 – 1992)

றாஹுல வித்தியாலய கனிஷ்ட மாணவர் தலைவர் (1990 – 1991)

மாத்தறை மாவட்ட அனைத்து வித்தியாலய மாணவர் தலைவர் சங்கத்தின் உதவிச் செயலாளர் (1990-1991)

றாஹுல வித்தியாலய சிரேஷ்ட மாணவர் தலைவன்  (1991 – 1993)

சிங்கள இலக்கிய மன்றத்தினதும் விஞ்ஞான சங்கத்தினதும் செயலாளர் (1990 – 1993)

அஷோக இல்லத்தின்  ஹொக்கி அணி அங்கத்தவர் (1985 -1987)

அஷோக இல்லத்தின் கூடைப்பந்து அணி அங்கத்தவர் (1987-1988)

றாஹுல வித்தியாலயத்தையும் மாத்தறை மஹா மன்தின்த பிரிவென் விஹார பெதிகம ஸ்ரீ ரத்தனபால அறநெறிப் பாடசாலையையும் பிரதிநிதித்துவம் செய்து தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பேச்சுப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றதோடு தங்க, வெள்ளிப் பதக்கங்கள் பலவற்றையும் விருதுகள் பலவற்றையும் வென்றெடுத்துள்ளார். (1989-1993)

 

 

சமயம்சார் சேவைகள் ::..

மாத்தறை புரட்டாதி மகா பெரஹெராவின் பஸ்நாயக்க நிலமேயாக 2007 ஆம் ஆண்டில் இருந்து இற்றைவரை செயலாற்றி வருகிறார்.

17வது வயதில் மாத்தறை, மஹாமன்தின்த பிரிவென் கல்லூரியின் பெதிகம ஸ்ரீ ரத்தினபால தஹம் பாடசாலையின் அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டு இலங்கையின் வயதில் மிகக்குறைந்த தஹம் பாடசாலை பிரதான ஆசிரியராக (1991 – 1998) சாதனை படைத்தார்.

தேசிய விழுமியங்கள் கல்வி மன்றத்தின் தேசிய அமைப்பாளர் (2000 முதல் இற்றைவரை)

மாத்தறை பிரதேச சாசனப் பாதுகாவலர் சபையின் (1996 – 2000) தஹம் பாடசாலை உபகுழுவின் செயலாளர்.

மாத்தறை மாவட்ட  தஹம் பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் (1993 – 2003)

தென்மாகாண தஹம் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் (1993 முதல் இற்றைவரை)

மாத்தறை மாவட்ட தஹம் பாடசாலை மாணவர் தலைவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் (1995 முதல் இற்றைவரை)

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தஹம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்திட்டங்களில் ஈடுபடல் (1994 முதல் இற்றைவரை)
   

ஒரு சாரணர் எனும் வகையில் ::..

இலங்கையின் சாரணரொருவர் பெறக்கூடிய அதிஉயர் விருதான சனாதிபதி சாரணர் விருத்தியை 17வது வயதில் பெற்றுக் கொண்டமை (1991)

“3 வது மாத்தறை றாஹுல’ சாரணர் அணியின் பிரிவுச் செயலாளர்              (1990 – 1993)

இலங்கை தேசிய சாரணர் தலைமையகத்தின் உதவித் தலைமையக சாரணர் ஆணையாளராக செயலாற்றினார். (2001 – 2004)

சாரணர் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவையைப் பராட்டு முகமாக இலங்கையின் தலைமைச் சாரணரான சனாதிபதியவர்களால் The Thanks Badge விருது  2009 இல் வழங்கப்பட்டது.

 

 

செஞ்சிலுவை அமைப்பின் சமூக சேவைகள் ::..

மாத்தறை மாவட்ட கனிஷ்ட செஞ்சிலுவை கருத்திட்டத்தை தாபிக்கும் பொருட்டு முன்னோடியாகத் திகழ்ந்ததோடு 16வது வயதில் அதன் முதலாவது மாவட்டச் செயலாளர் ஆனார் (1990-1991)

இலங்கை செஞ்சிலுவைக் கழகங்கள் கட்டியெழுப்பப்பட்ட வேளையில்  மாத்தறை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைக் கழகத்தின் முதலாவது மாவட்டச் செயலாளர். (1991-1992)

றாஹுல வித்தியாலயத்திற்கு கனிஷ்ட செஞ்சிலுவைக் கழகத்தை அறிமுகஞ் செய்ய முனைந்து செயலாற்றியதோடு வித்தியாலய கனிஷ்ட  செஞ்சிலுவைக் கழகத்தின் முதலாவது பாடசாலை செயலாளர் ஆனார். (1990 – 1991)

 

முத்துஹர சிறுவர் கழகத்தின் ::..

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முத்துஹர சிறுவர் கழக கருத்திட்டத்துடன் இணைந்து முத்துஹர சிறுவர்கழக மாத்தறை நகர்க கிளையை நிறுவுவதில் முனைந்து செயலாற்றியதோடு 13வது வயதில் அதன் ஸ்தாபக தவிசாளரானார். (1981 – 1990)

மாத்தறை முத்துஹர சிறுவர் கழகத்தின் ஆலோசனை சபையின் தவிசாளர் (1990 இல் இருந்து இற்றைவரை)

   
ஈடேற்றிய விசேட கருத்திட்டங்கள் ::..

மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதார வசதியீனங்களை எதிர் நோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு “சிஷ்ய பிரபோதய”  கருத்திட்டத்தை ஆரம்பித்தார்.

தான் கல்வி பயின்ற பாடசாலையான மாத்தறை றாஹுல வித்தியாலயத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு பிரவேசிக்க தகைமை பெறுகின்ற பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மாணவர்க ளுக்குப் புலமைப்பரிசில்களை வழங்குதல்.

 

 

பயின்றவிசேட பயிற்சிப் பாடநெறிகள் ::..

தஹம் பாடசாலைக் கல்வி தொடர்பான சிறுவர் உளவியல், கல்வித் தத்துவம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பாடநெறியைப் பயின்றார். (1990 – 1993)

கெப்பிட்டல் றேடியோ பயிற்சி நிறுவகத்திலும் (1989) குமாரசிங்க றேடியோ மற்றும் இலெக்ரோனிக் பயிற்சி நிறுவனத்திலும் (1990) றேடியோ இலெக்ரோனிக்  விஞ்ஞானம்  பற்றிய  பாடநெறியைப் பயின்றார்.

உண்மையான பெளத்தராக செயலாற்றுகின்ற அதே வேளையில் கிறிஸ்தவ சமயம் பற்றிய பாடநெறியொன்றை வெற்றிகரமாகப் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார் (1987-1988)

 

 

குடும்பப் பின்னணி ::..

1974 மார்ச் 17 ஆம் திகதி மாத்தறை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவின் திஹகொட மற்றும் மாலிம்பொட ஆகிய விவசாயக் கிராமங்கள் மூதாமையர்களின் ஆதிக் கிராமங்களாக அமைந்தன.

தகப்பனாரான  திரு. எம். எஸ். டி. பத்திரண சிங்கள மொழிப் பட்டதாரியாக விளங்கி யதோடு ஆசிரியராகவும் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளில் முதுநிலை விரிவுரையாளராகவும் பின்னர் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

தாயாரான திருமதி. ஜே. கே. குணவர்த்தன, கீர்த்திமிக்க கொத்தலாவல / ஆட்டிகல பரம்பரையைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு ஆசிரியையாகவும் ஆசிரிய ஆலோசக ராகவும் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

ஒரே சகோதரி றுஹுணு பல்கலைக்கழகத்தில் உதவி நூல்நிலைய அதிபதியாக சேவையாற்றி வருவதோடு அவரது கணவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி  உத்தியோகத்தவராவார்.

பாரியாரான திருமதி மிஹிரி வர்ணகுலசூரிய இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவின் புதல்வியாவார்.

இலங்கையில் நிகழ்கால அரசியலில் ஈடுபட அத்தியாவசியமான காரணியாக அமைந்துள்ள அரசியல் அல்லது செல்வம் நிறைந்த குடும்பப்பின்னணி எவ்விதத்திலும் இவருக்கு கிடையாது.

 
     
   

முதற் பக்கம்  |  தோற்றப்பாடு  |  புகைப்பட கலரி  |  மக்கள் சேவை  |  செய்திகள்  |  தொடர்பு கொள்க

பதிப்புரிமை © 2010 - புத்திக்க பத்திரண. முழுப்பதிப்புரிமை உடையது

Solution By : Jaya Shri Combine