www.buddhikapathirana.com    

ஸ்கைப் ஊடாக புத்திகவை தொடர்பு கொள்க

My status

புத்திக பத்திரண - பாராளுமன்ற உரைகள்

 

 
 

உங்களின் ஒத்துழைப்பினைக் வெளிக்காட்டுங்கள்

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய தேசியக் கட்சியின்

உத்தியோகபூர்வ வெப்தளம்

 
 
 

இலங்கையின் நிகழ்கால அரசியல் களத்தில் முன்னேறி வருகின்ற இளம் தேசிய அரசியல் தலைமைத்துவத்தில் முன்னணி வகிப்பவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. புத்திக பத்திரண ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 7வது பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினராவார். 2010 ஏப்பிறல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குளின் சதவீதத்தைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினராகவே பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.

அத்துடன் இவர் இலங்கையின் அதிகப்படியான விருப்புவாக்கு வீதத்தைப் பெற்று 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தென்மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டதோடு இலங்கையின் வயதில் மிகக்குறைந்த மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

2006 ஆம் ஆண்டில்
JCI – HSBC TOYP விருது வழங்கல் வைபவத்தில் ஆண்டின் மிகச்சிறந்த இளம் அரசியல்வாதிக்கான விருதினையும் பெற்றார்.

9 ஆண்டுகளாக சிரச TV மற்றும் TNL தொலைக்காட்சி சேவைகளில் அரசியல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துபவராகவும் செயலாற்றியுள்ள இவர் களணிப் பல்கலைக் கழகத்தின் றாகம மருத்துவபீடத்தின் உள்ளுறைக்கு முந்திய மருத்துவப் பயிற்சியாளர் (Pre Intern Medical Practitioner) ஆவார்.

மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் முன்னாள் மாணவராகவும் முத்துஹர சிறுவர் கழகத்தின் தலைவராகவும் இலங்கை செஞ்சிலுவை கழகத்தின் இளம் செஞ்சிலுவை வட்டங்களின் மாவட்டச் செயலாளராகவும் செலாற்றியுள்ள இவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்த பேச்சாளராவார் / விவாதமேடை அங்கத்தவ ராவார்

இலங்கையின் வயதில் மிகக்குறைந்த அறநெறிப்பாடசாலை அதிபராக தனது 17 வது வயதில் நியமிக்கப்பட்ட புத்திக மாத்தறை புரட்டாதி மகா பெரஹரவின் பிரதம பஸ்நாயக்க நிலமே ஆவார்.


லிபரல் சர்வதேசத்தின் அகில ஆசிய இளம் லிபரல்வாதிகளின் அமைப்பின்
(YLDA – Young Liberals and Democrats of Asia) நிறைவேற்றுச் சபைக்கு 2007 மற்றம் 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இவர் ஒட்டுமொத்தமான ஆசியாவிலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார்

அத்துடன் இலங்கையின் லிபரல் இளைஞர் கழகங்களில் தேசிய தலைவராகவும் 2006 – 2009 ஆம் ஆண்டுளில் இவர் செயலாற்றி உள்ளார்.

இவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நீங்களும் பிரவேசிக்கவும்

www.buddhikapathirana.org

www.buddhikapathirana.com

www.samadhifoundation.net

 
   

முதற் பக்கம்  |  தோற்றப்பாடு  |  புகைப்பட கலரி  |  மக்கள் சேவை  |  செய்திகள்  |  தொடர்பு கொள்க

பதிப்புரிமை © 2010 - புத்திக்க பத்திரண. முழுப்பதிப்புரிமை உடையது

Solution By : Jaya Shri Combine